தாய்மொழியினை காப்போம் - பகுதி - 1


          தமிழ் கூறும் நல்லுலகில், தமிழ் கூறி, தமிழ் பறுகி, தமிழால் வளர்ந்த நாம் இன்று அன்னை தமிழ் நாட்டில் தமிழ் மீட்சி இயக்கம் நடத்த வேண்டி வந்த கொடுமையை என்னெவென்று சொல்லுவது, இந்த காலத்தின் கொடுமைக்கு நாம் எந்த அளவிற்கு காரணம் என்று தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் எண்ணி எண்ணி வருந்திதிருந்த வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

    தமிழுக்கு நாம் செய்த இந்த கொடுமை, நம்காலத்திலேயே, நம்மால் திருத்தப்பட வேண்டிய, திருந்தப்படவேன்டிய கொடுமை என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது..அப்படி திருந்தி வருந்த வேன்டிய நாம் நம்முடைய முயற்சிகளை, அல்ல முடிக்க வேண்டிய செய்ல்களை எவ்வளவு துரிதமாகவும், திருத்தமாகவும் செய்கிறொமோ அந்த அளவிற்கு நம் அன்னை தமிழுக்கு நாம் நம் சேவை!, இல்லை கடமையை செய்தவர்களாகிறோம்.

    நாம் நம்முடைய இயக்கத்தின் பெயரிலேயே நம் தமிழுக்கு நேர்ந்த கொடுமையை, அதற்கு செய்யவேண்டிய திருத்தங்களை, பெற்றிருக்கிறோம். அதாவது நம் அன்னைத்தமிழை தொலைத்துவிட்டு நிற்கும் நாம் நம் தமிழை மீட்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

           நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி யாதெனில் நம் அன்னை தமிழுக்கு இந்த அவலம் நேர்ந்த காரணம் யாரால் என்பதுதான். ஆங்கிலேய ஆட்சியாளர்களால்,நம்மை முழுவதுமாக அடிமை படுத்துவதற்காகவும், நம்மின் உழைப்பை முழுவதுமாக் சுரண்டி காலம் காலத்திற்கு அவர்கள் உட்கார்ந்து உண்ண வேண்டும் என்ற கேவலமான எண்ணத்தினால் பின்னப்பட்ட சூழ்ச்சி வலையினாலும்தான் நமக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது, என்பதை புரிந்து கொள்ள அவர்கள் செய்த அந்த சூழ்ச்சி என்ன என்பது நமக்கு தெரிய வேண்டும்.

      நம்மை முழுவதுமாக அடிமைப்படுத்தவேன்டும் என்ற திட்டத்தினை செயல் படுத்துவதற்காக வெள்ளை நிறவெறீ அரசால் நியமிக்கப்பட்ட இன வெறியன் "மெக்காலே".தனது 80000 பவுண்டு கடனை அடைப்பதற்காக இங்கிலாந்து அரசிடம் ஊதியம் பெற்றுக்கொண்டு அவர்களீன் ஆணைப்படி ஒரு அடிமைக்கல்விமுறையை உருவாக்க இந்தியா முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு பின்தனது திட்டமாக இங்கிலாந்து நாடளுமன்றத்தில் பேசிய சாரம்சம் என்ன்வென்றால்"நான் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்த்தபோது அங்கு ஒரு பிச்சைக்காரனையோ, திருடனையோ பார்க்கமுடியவில்லை, அந்த அளவிற்கு செல்வ வளமிக்கபாரம்பரியம் கொண்ட நாடு அது. இந்திய நாட்டினை முழுவதுமாக நம் வசப்படுத்த வேண்டுமானால் அந்த நாட்டின்

   பாரம்பரியத்தை,கலாசாரத்தை,நாகரீகத்தை,அந்த நாட்டின் பாரம்பரிய விவசாய முறையை முற்றிலுமாக அழித்து வெளீநாட்டில் இருந்து வருகின்ற எதையும் உயர்வாகவும், குறிப்பாக ஆங்கில மொழியை தங்கள் மொழியை விட உயர்வானதாக கருதவைக்க வேண்டும்,அப்போதுதான் இந்தியர்களை நாம் முழுவதுமாக அடிமைப்படுத்தமுடியும்"என்பதுதான்.

   அவன் பேசிய இந்த வார்த்தைகளின் மூலம் அந்த கொடியவனின் இனவெறியும் கொடூர மனப்பான்மையும் நமக்கும் நன்கு விளங்கவருகிறது. அப்படி கோடூர சிந்தனையின் அடிப்படையில் உருவாகி, நம் மீது தினிக்கப்பட்ட கல்வி முறைதான் "மெக்காலே கல்வி முறை".

   இந்த மெக்காலே கல்வி முறையின் அடிப்படையினால் நமக்கு நம் பாரம்பரியம், நம் கலாச்சாரம், சார்ந்த கல்வி மறுக்கப்பட்டு அன்னிய கலாச்சாரம் மதப்பிரச்சாரம், ஆங்கிலகல்விமுறை என்பவற்றின்மூலம் திணிக்கப்பட்டது. ஆங்கிலம் படித்தால்தான் அரசாங்க வேலை என்று ஆங்கிலம் படிக்க நாம் வற்புறுத்தப்பட்டோம். மேலும் இந்த கல்வி முறையில் பாடம் அது சம்பந்தமான  கேள்வி முறை என மனனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மாணவனின் படைப்பாற்றல்,  கற்பனைத்திறன்,புதியசிந்தனைகள் புறந்த்தள்ளப்பட்டன அதனால் புதிய கண்டுபிடிப்புகள், புதிய படைப்புகள் நம் இந்திய சமுதாயத்திலிருந்து வருவது அருகி நம் சமுதாய வளர்ச்சி அடியோடு நாசமாக தொடங்கியது. இதனால் படிப்பு என்றால் அது வேலைக்கும்அதன் மூலம் வரும் ஊதியத்திற்கும் மட்டுமே என்ற அடிமைக்கல்விமுறை நம்மில் நன்றாக ஊடுறுவியது.. இதனால் பொது நலன் சமுதாய சிந்தனை என்ற உயரிய சிந்தனையெல்லாம்
வேலை வெட்டியில்லாதவன் செயல் என்றும் சயநலம் பார்ப்பது மட்டுமே சிறந்ததென சிறுமையான எண்ணம் நம் அனைவரிடமும் மேலோங்கியது.
ஆனால்இந்தநிலைநம்சுதந்திரத்திற்குப்பின்மாறியிருக்கவேண்டுமல்லவா?ஆனால் மாறவில்லை.

      ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டம், அவர்கள் நடத்திய ஆட்சி முறை என முந்தையஆட்சி அப்படியே இங்கு தொடர நம் இன, மொழி அழிப்பும் தொடர்ந்து நடந்தேறியது. எந்த அளவிற்கு இங்கே ஆங்கிலேய ஆட்சிமுறை தொடர்ந்ததென்றால்ஆங்கிலேயன் தனது நாட்டில் பகலாக இருக்கும்போது ஆண்டு நிதிநிலைஅறிககை தாக்கல் செய்யவேண்டும் என்ற அவனது வசதிக்காக இங்கு இரவில் தாக்கல் செய்யும் வழக்கத்தை அப்படியே
மாற்றாமல் 15 ஆண்டுகள் முன்பு வரை இரவில் ஆண்டுநிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து ஆங்கிலேயனின் பூரணவிசுவாசிகளாக காட்டிக்கொண்ட அரசியல் தரகர்கள் கையில் நம் நாடு மாட்டியதுநம் மொழிக்கும்,நம் இனத்திற்க்கும் ஏற்ப்பட்ட இன்னொரு சாபக்கேடு.

            ஏற்கனவே மெக்காலே கல்வி முறையினால் குற்றுயிரும் 
குலையுயிருமாயிருந்த நம் தமிழ் மொழியின் வளர்ச்சி மெக்காலேவின் பரிணாம வளர்ச்சியான மெட்ரிகுலேசன் என்னும் ஆங்கில கல்விமுறையினால் முற்றிலும் சிர்குலைந்தது.

          மெட்ரிகுலெசன்கல்விமுறையில் பணம் கட்டி படிப்பதுதான் தங்களுக்கு மதிப்பு மற்றும் சமுத்தாயத்தில் கௌரவம் என்ற போலி சிந்தனைநம்மிடம்
விதைக்கப்பட்டது. இதனால் எவ்வளவு சிரமமாயிருந்தாலும் பரவாயில்லை உயர்ந்த அளவு கட்டணம் கட்டி படித்தால் அது உயர்ந்த கல்வி என்ற போலி கௌரவம் நம் சமுதாயத்தில்பரவி அரசு பள்ளிகளில் படித்தால் அது கௌரவக்குறைவு, என்னும் எண்ணம் மேலோங்க அது மெட்ரிகுலேசன் கல்வி முதலாளிகள் என்னும் கல்விக்கொள்ளையர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.அந்தப்பணப்பிசாசுகளீன் கையில் நம் கல்வி சிக்கி
சீரழிந்துகொன்டிருக்கிறது.

     தங்களது நிலைக்கு சிறிதும் பொறுந்தாத கட்டுபடியாகாத கட்டணம் செலுத்தி மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை,இந்தசமுதாயத்தின்எதிர்கால நம்பிக்கைகளை சேர்த்துஅவர்களுக்கு சிறந்த கல்வியைக் கொடுத்துவிட்டோம் என்று பெற்றொர்கள் காத்திருக்க உண்மையில் நடப்பது என்ன தெரியுமா?. இந்த மெட்ரிகுலேசன் கல்விக் கூடங்களில் 95% பள்ளிகளில் கல்வியின் முக்கியத் தேவையான உண்மையான ஆசிரியர்களே பணியமர்த்தப்படுவதில்லை. ஆசிரியர் பயிற்சி, மற்றும் கல்வியியல் பயின்ற அசிரியர்களுக்கு குழந்தைகளீன் கற்கும் திறன் அறிதல்,குழந்தைகளீன் மனநிலை, குழந்தைகளூக்கு கற்பிக்கும் திறன் போன்ற அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது என்ற உண்மை மறைக்கப்பட்டு 12 வகுப்பு, பட்டம் பெற்ற அனைவரையும் போலி ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு போலி கல்வி வற்புறுத்தலான மனனம் மூலம் மனனிக்கப்படுகின்றது. இந்த மனனம் அவர்களுக்கு தேர்வில் மதிப்பெண் பெறவும் அதன் மூலம் வேலை வாய்ப்புக்கான வடிகட்டுதலில் தப்பிக்கமட்டுமே பயன்படும் என்று நம்பப்படுகிறது.இந்த போலிக்கல்வி பயின்று அடிப்படை கல்வியை முழுமையாக அளிக்கப்படாத 30 ஆண்டுகால இடைவெளியில் நம் சமுதாயம் சார்ந்த வளர்ச்சியென்பது முற்றிலுமாக ஒதுக்கிவைக்கப்பட்டு சுய கௌரவம்,தாய்நாட்டுப்பற்று,தாய்மொழிப்பற்று என்பதெல்லாம் நமக்கு தெவையில்லாதவைகள் என்றும் வெள்ளையனுக்கு கைக்கூலியாக இருப்பதும் அவன் நாட்டிற்கு செல்வதும்.இன்னும் அங்கே வாழ அனுமதிக்கப்பட்டால் அது பிறவிப்பயன் என்னும் அசிங்கசிந்தனை விசவிருட்சமென வளர்ந்து நம் தமிழ் சமுதாயத்தை முற்றிலும் அழித்து ஒழிக்கத்துவங்கியுள்ளது.

      பூரணத்தமிழ் பேசுவது தவிர்க்கப்பட்டு, அரை குறை ஆங்கிலக்கலப்பில் பேசுவதே நாகரீகம் என்னும் புரட்டு நாகரீகத்தின் கையில் நம் தமிழ் மொழியும், நம் இனமும் சிக்கி வதைபட்டுகொண்டிருக்கின்ற இந்த வேலையில் நாம் இன்னும் விழிக்காமல் பொய் உறக்கம் தழுவியிருந்தால் நம் எதிர்கால சமுதாயம் நாகரீகமற்றவர்களாய் எங்கோ தொலைந்த போன இனம்கெட்ட கேவலர்களாய் வாழ நாமே காரணம் என்பதைஉணரவேண்டும்.இதுவே நம் தமிழ் மீட்சியின் முதல் பணி.

(தொடரும்)

                             ப.முத்துக்கணேசன்.
                             தூத்துக்குடி.